வேப்பூர்:
மக்காச்சோளம் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நல்லூர் வேளாண் உதவி இயக்குனர் கீதா அறிக்கை வெளியிட்டார்.
அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.,
நல்லூர் வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலம் படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் பறவைகளுக்கு இறையாகின்றன. கடைசி உழவின் போது 100 கி., வேப்பம் புண்ணாக்கு இடுவதால் கூட்டுப் புழுக்கள் பாதித்து அந்துப்பூச்சிகளாக வெளி வருவது தடுக்கப்படும்.
அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றாற்போல் உளுந்து, பச்சை பயறு, கொண்டை கடலை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும். வயல்களை சுற்றி 4 வரிசையில் நேப்பியர் புல் பயிரிடுவது படைப்புழுவின் ஆரம்ப நிலையை தடுக்கும்.
சயான்டிரானிப்போல 19.8 சதவீதம், தையாமீத்தாக்ஸம் 19.8 சதவீதம் மருந்து கலவையை 1கி., விதைக்கு 6 மி.லி., அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். மக்காச்சோளத்தை 10 வரிசைக்கு 60 செ.மீ., இடைவெளி விட்டு நடுவதால் பாதிப்புக்குள்ளான இடத்தில் பூச்சி மருந்து கொல்லிகளை எளிதில் தெளிக்க முடியும்.
இனக்கவர்ச்சி பொறி அல்லது குப்பிகளை ஏக்கருக்கு 20 வைப்பதால், ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் விபரங்களுக்குp வேளாண் உதவி இயக்குனர் மற்றும் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தின ஓசை வேப்பூர் செய்தியாளர் து.சந்திரசேகர் நகர் 9786657287.,