சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்கோரிக்கை மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழன் ஜெகன் ஆணைக்கிணங்க சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் மணல் குவாரி நிரந்தரமா மூடக்கோரியும் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு நிதி நிறுவனங்கள் கொரோனா காலத்திலும் மக்களை மிரட்டி வசூல் செய்வதை நிறுத்தக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது இதில் மாநில துணை செயலாளர் எஸ் கே மாதவன் ,மாநிலத் துணைச் செயலாளர் சூசை மேரி நாதன், மாநில இளைஞரணி செயலாளர் பார்த்திபன், மாநில தொழில் நுட்ப பிரிவு ரகோத்தமன் மாவட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் உடன் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,.
விழுப்புரம் போட்டோகிராபர் திருமால்.,