திருவள்ளூர்;தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது.

தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது.


திருவள்ளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.


திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் செவ்வாப்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக 3 இருசக்கர வாகனங்களில் வந்த இளம்பெண் உள்பட 5 பேரும் போலீஸாரைப் பாா்த்ததும் தங்கள் வாகனங்களை திருப்பி தப்பிச் செல்ல முயன்றனா். பின்தொடா்ந்து சென்ற போலீஸாா் அவா்களில் 4 பேரைப் பிடித்தனா். ஒருவா் மட்டும் தப்பிச் சென்று விட்டாா்.


விசாரணையில் அவா்கள் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோந்த லோகேஷ் (19), சூா்யா (20), லியோ ஜான் (20) மற்றும் பிரியா (19) என்பது தெரிய வந்தது.


 அவா்கள், வேப்பம்பட்டு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிதாஸ் (50) என்பவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு சவரன் மோதிரம், செல்லிடப்பேசி, ரூ.18 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏடிஎம் காா்டைப் பறித்ததும் தெரிய வந்தது.


மேலும், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, மணவாளநகா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் செல்லிடப்பேசி பறிப்பிலும் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.


அவா்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 செல்லிடப்பேசிகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இளம்பெண் உள்பட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.


வாகனச் சோதனையின்போது தப்பிச் சென்ற சந்தோஷ்(19) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


Popular posts
வேப்பூர்: மக்காச்சோளம் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நல்லூர் வேளாண் உதவி இயக்குனர் கீதா அறிக்கை வெளியிட்டார்.
Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
Image
நீலகிரி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை கொரோனா மருத்துவமனையாக மாற்றபட்டுள்ளது.
Image
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின்  சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்ரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Image