கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்
ஊரடங்கு காலத்திலும் செயல்படும் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது தனியார் நிதி நிறுவனங்கள் மக்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமலும் அரசு உத்தரவுகளை மதிக்காமலும் மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் இருந்து வருகிறது இந்தநிலையில் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களுடைய வருமானத்தை இழந்து உணவுக்கு வழியின்றி நலிவுற்ற நிலைமையில் இருக்கின்றனர் இந்நிலைமையை அரசு கவனித்து.
வங்கி கடன் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் விவசாயக் கடன்கள் போன்றவற்றை கேட்டு மக்களை துன்புறுத்தக் கூடாது என்று ஆர்பிஐ மற்றும் அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது ஆனால் உத்தரவை மீறும் விதமாக சில தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனுக்கு அதைவிட அதிகமான வட்டியுடன் திருப்பி இப்போது கேட்டு தொந்தரவு செய்து கொண்டும் மிரட்டல் விடுத்தும் பொது மக்களை பயமுறுத்தி கடனை வசூலித்து கொண்டிருக்கிறது இந்தத் தனியார் நிதி நிறுவனங்கள் அரசு உத்தரவுகளை மதிக்காமல் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக உடனடியாக இந்த வேளையில் நிதி நிறுவனங்கள் பணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மனு வழங்கப்பட்டது உடன் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
குமரி மாவட்ட செய்தியாளர் ராஜாசிங்.,